என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமானூர் அருகே ஜல்லிகட்டு போட்டி
  X

  திருமானூர் அருகே ஜல்லிகட்டு போட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமானூர் அருகே ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது
  • இப்போட்டியில் 678 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

  திருமானூர்,

  அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணை காவல் கண்கணிப்பு அலுவலர் ஆரோக்கிய அரி, டி.எஸ்.பி. சங்கர்கனேஷ் மற்றும் கிராம நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், புதுக்கோட்டை மங்கலமாதா கோவில் பங்குதந்தை ரெஜிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டான இப்போட்டியில் 678 காளைகள் மற்றும் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

  போட்டியில் கலந்து கொண்டுள்ள காளைகள் மற்றும் வீரர்களுக்கு முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதில் 33 மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. 2 பேர் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாடு பிடி வீரர்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர், சாப்பாடு வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாட்டை அடக்கிய மாடுபிடி வீரர்கள் மற்றும் பிடிபடாத மாட்டு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

  Next Story
  ×