என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவளூர் கிராமத்தில் மாசற்ற தீபாவளி விழிப்புணர்வு பேரணி
- அரியலூர் அடுத்த சிறு வளூர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாசற்ற தீபாவளி விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது.
- இந்த பேரணியானது கிராமத்தின் அனைத்து தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறை வடைந்தது.
அரியலூர்
அரியலூர் அடுத்த சிறு வளூர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாசற்ற தீபாவளி விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல் வர் சாந்தகுமாரி கலந்து கொண்டு பேர ணியை கொடியசைத்து தொடக்கி வைத்து பேசினார்.
இந்த பேரணியானது கிராமத்தின் அனைத்து தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறை வடைந்தது.
பேரணியின் கலந்து கொண்ட மாணவ, மாணவி கள் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும் என்று முழக்கமிட்டனர். முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பேரணியில் சுப்பராய புரம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந் தில் குமரன், செவ்வேள்.தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் கண் ணகி, சரண்யா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.






