என் மலர்
உள்ளூர் செய்திகள்

சமூகவலைதளங்களில் சிறுமி குறித்து அவதூறு பதிவு - போக்சோ சட்டத்தில்ல் வாலிபர் கைது
- ஒரு சிறுமி குறுத்து அவதூறாக வீடியோ தயாரித்து வாட்ஸப் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.
- இதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரகுடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் நவநீத கிருஷ்ணன்(வயது 20). இவர் ஒரு சிறுமி குறுத்து அவதூறாக வீடியோ தயாரித்து வாட்ஸப் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி சிறுமியின் குடும்பத்தார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் நவநீத கிருஷ்ணன் சிறுமிக்கு பல்வேறு வகையில் இடையூறு செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






