என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
- அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
- ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஓலிப் பெருக்கி மற்றும் இதர உபகரணங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமியிடம் வழங்கினார்.
அரியலூர்,
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகா மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர் ஜெயக்குமார் பள்ளிக்கு தேவையான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான ஓலிப் பெருக்கி மற்றும் இதர உபகரணங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமியிடம் வழங்கினார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர், இணைச் செயலர் குணா, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் வேலுச்சாமி நன்றி தெரிவித்தார்.
Next Story






