என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு உழவன் செயலியை பயன்படுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
- நெல் அறுவடை எந்திரங்கள் வாடகைக்கு உழவன் செயலியை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்
- விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை எந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு உழவன் செயலியை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் அறுவடை எந்திரங்களை நேரடியாக உரிமையாளர்களிடம் இருந்து பெற உரிமையாளர் பெயர், விலாசம், கைப்பேசி எண்ணுடன் மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக உழவன் செயலியின் மூலம் வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு என்ற முகப்பை தேர்வு செய்து அறுவடை எந்திரங்கள் பற்றி அறிய என்ற துணை முகப்பின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் அதன் தொடர்புடைய வட்டாரத்தை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் உழவன் செயலிக்குள் சென்று நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொண்டு இடைத்தரகர் இன்றி நெல் அறுவடை எந்திரங்களை பெற்று பயனடைய வேண்டும் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story