என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காவலர் அணி முதலிடம்
- அரியலூர் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காவலர் அணி முதலிடம் பிடித்தனர்
- வெற்றி பெற்ற காவலர்கள் அணிக்கு ஊக்குத் தொகையாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் அரசு துறை சார்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என 50 போட்டிகள் நடைபெற்றது. தற்போது ஜனவரி, பிப்ரவரி மாதம் மாவட்ட அளவிலான போட்டிகள், மே மாதம் மாநில அளவிலான போட்டிகளும் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி, போக்குவரத்து ஆய்வாளர் சாஹிரா பானு தலைமையிலான கபடி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து எரிதல் போட்டியில் போக்குவரத்து காவலர் அஞ்சலி முதல் இடமும், வாலிபாலில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற காவலர்கள் அணிக்கு ஊக்குத் தொகையாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராஜா, சோமசுந்தரிடம் வாழ்த்து பெற்றார்.