என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைத்தீர்ப்பாளர் நியமனம்
    X

    அரியலூர் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைத்தீர்ப்பாளர் நியமனம்

    • அரியலூர் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைத்தீர்ப்பாளர் நியமிக்கபட்டுள்ளார்
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான புகார்களை குறைத்தீர்ப்பாளியிடம் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் படி, அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக வைத்தீஸ்வரன் குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மேற்கண்ட திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளரின் 8925811301 என்ற எண்ணிலும் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×