என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
- ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- பேரணி ஜெயங்கொண்டம் முக்கிய வீதி வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிந்தது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அண்ணா சிலையில் மாவட்ட காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு சார்பாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை டி.எஸ்.பி. வெங்கடேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாடர்ன் கல்லூரி தாளாளர் பழனிவேல், துணைத்தலைவர் சுரேஷ், ஆய்வாளர்கள் ஜெகநாத் சாஹிரா பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி ஜெயங்கொண்டம் முக்கிய வீதி வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிந்தது. இதில் மாணவர்கள் போதை தடுப்பு பற்றிய பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள் தன செல்வம், இளங்கோவன், நாகராஜ் மற்றும் மாடர்ன் கல்லூரி மாணவர்கள், காவல்துறை சார்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






