என் மலர்
உள்ளூர் செய்திகள்

தா.பழூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
- தா.பழூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார்
- இது குறித்து அவரது தாய் தனலட்சுமி தா.பழூர் போலீசில் புகார் அளித்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் வசித்து வருபவர் அறிவழகன். இவரது மகள் ஜெயப்பிரியா (வயது 19). இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 23-ந் தேதி காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயப்பிரியா கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து அவரது தாய் தனலட்சுமி தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரியாவை தேடி வருகிறார்.
Next Story






