என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள் 50 பேர் நூலக உறுப்பினர்களாக சேர்ப்பு
- அரசு பள்ளி மாணவிகள் 50 பேர் நூலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
- ரூ.1,000 செலுத்தி புரவலராக சேர்ந்தனர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முழுநேர நூலகத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாவை சங்கரை மாவட்ட நூலகர் சண்முகநாதன் பாராட்டி சால்வை அணிவித்தார். கவாஸ்கர் மற்றும் ஆசிரியைகள் மாரியம்மாள், தமிழரசி ஆகியோர் நூலகத்தில் தலா ரூ.1,000 செலுத்தி புரவலராக சேர்ந்தனர். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் 50 மாணவிகளை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். முன்னதாக நூலக ஒருங்கிணைப்பாளர் தமிழாசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். முடிவில் உடையார்பாளையம் நூலகர் முருகானந்தம் நன்றி கூறினார்."
Next Story






