search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    சீர்காழி பகுதி கடைகளில் ஆய்வு செய்த கலெக்டர் மகாபாரதி.

    கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? கலெக்டர் 'திடீர்' ஆய்வு

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம்.
    • மேலும், கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி சீர்காழி நகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் முக்கூட்டு சாலையில் இயங்கி வந்த பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, அங்கு புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் தேனீர் கப்புகள் இருந்ததை கண்டறிந்து பெட்டிக்கடை உரிமையாளரிடம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரிடம் மாவட்ட கலெக்டர் எச்சரித்தார்.

    மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஈசானிய தெருவில் இயங்கி வரும் பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, கடை உரிமையாளரிடம் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்க ளுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

    தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை மேற்கூரை கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததை யொட்டி, மாவட்ட கலெக்டர் துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி சமையலறை, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் எடுக்க ப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆணையரிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் ஹேமலதா , நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன் , நகர் மன்ற உறுப்பினர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    Next Story
    ×