search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறப்பளீஸ்வரர்கோவில் ஆடிப் பெருக்கு விழா   கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    அறப்பளீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு கொடியேற்று விழா நடந்ததையும், உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதையும் படத்தில் காணலாம்.

    அறப்பளீஸ்வரர்கோவில் ஆடிப் பெருக்கு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.
    • கொடியேற்று விழாவில் கொல்லிமலை, சேந்தமங்கலம், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சி பெரிய கோவிலூர் பகுதியில் புகழ் பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.

    கடையெழு வள்ளல்களில் ஒருவராகிய வல்வில் ஓரி மன்னரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிவ பெருமானுக்கும், கொடி கம்பத்திற்கும் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பின் உற்சவமூர்த்தி உட்பிரகாரத்தில் வலம் வருவதல் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து 5 நாட்கள் விழா நடக்கிறது. விழாவையொட்டி இன்று சாமிக்கு திருக்கல்யாணமும், சாமி திருவீதி உலாவும். அதனை தொடர்ந்து நாளை(புதன்கிழ்மை) ஆடிப்பெருக்கு நாளில் உற்வர் சோமஸ்கந்தர் பல்லக்கிலும், வீதி உலாவும், அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும் நடக்கிறது.

    முன்னதாக கொடியேற்று விழாவில் கொல்லிமலை, சேந்தமங்கலம், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    இவ்விழாவில் வளப்பூர் நாடு பட்டக்காரர் பார்த்தீபன், உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்க மாநில தலைவர் வேலுசாமி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஆடி பெருக்கு விழாவை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக கொல்லிமலைக்கு சிறப்பு பேருந்து வசதிகளை போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×