search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல்
    X

    நாமக்கல்லில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்புதல்

    • நாமக்கல் ரெயில் நிலையம் வரை உள்ள ரெயில் பாதையில், இடைப்பட்ட மரூர்ப்பட்டி கிராமம் வழியாக நாமக்கல் புதிய பை-பாஸ் ரோடு அமைய உள்ளது.
    • இந்த ரிங் ரோடு செல்லும் வழியில், அங்கு உள்ள ரெயில்பா தையை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் களங்காணி ரெயில் நிலையத்தில் இருந்து, நாமக்கல் ரெயில் நிலையம் வரை உள்ள ரெயில் பாதையில், இடைப்பட்ட மரூர்ப்பட்டி கிராமம் வழியாக நாமக்கல் புதிய பை-பாஸ் ரோடு அமைய உள்ளது. இந்த ரிங் ரோடு செல்லும் வழியில், அங்கு உள்ள ரெயில்பா தையை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இந்த மேம்பாலத்தை அமைப்பதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறைக்கும் தென்னக ரெயில்வே துறைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெற வேண்டி உள்ளது. இதுநாள் வரை இதற்கான ஒப்புதலை தென்னக ரெயில்வே வழங்கவில்லை.

    இந்த நிலையில் தற்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராஜேஷ்குமார் கடந்த பிப்ரவரி மாதம், மத்திய ரெயில்வே அமைச்ச கத்துக்கு, மரூர்ப்பட்டி அருகே புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரி ஒரு கடிதம் அனுப்பினார். அவரது கோரிக்கையை ஏற்று நாமக்கல் புதிய பைபாஸ் ரோடு திட்டத்தில், மரூர்ப்பட்டி அருகே ரெயில் பாதையில் மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சா லைத்துறைக்கும், தென்னக ரயில்வேவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் மேம்பாலம் அமைக்க தேவையான திட்ட மதிப்பீட்டை, தென்னக ரயில்வே தயாரித்து, தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறையிடம் அளிக்கும். அதன்பி றகு மேம்பாலம் கட்டுமான பணியை தென்னக ரயில்வே மேற்கொள்ளும் என்று எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×