search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு சங்க தேர்தல் கோட்டம் வாரியாக  தேர்தல் பார்வையாளர்கள்  நியமனம்
    X

    கூட்டுறவு சங்க தேர்தல் கோட்டம் வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

    • ஒரு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்து, சங்க நிர்வாகத்தை மேற்கொள்வர்.
    • தேர்தல் பணிகள் துறை வாரியாக துவங்கி, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர்கள், துணை பதிவாளர்கள் மட்டத்தில் இரு கட்ட ஆலோசனை நடத்தி தேர்தல் பணிகள் குறித்து உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

    இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 149 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா 11 இயக்குனர்கள் கொண்ட நிர்வாக குழு, உரிய சங்கங்களின் ஓட்டுரிமை பெற்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவர்.

    அவர்களில் ஒரு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்து, சங்க நிர்வாகத்தை மேற்கொள்வர். அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பணிகள் துறை வாரியாக துவங்கி, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.

    இதுதவிர, தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட சங்கம், முறைகேடு புகார்களால் கலைக்கப்பட்ட சங்கம் உள்ளிட்ட விவரங்கள் பெறும் பணி நடந்து வருகிறது. இம்முறை வருவாய் கோட்ட அளவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

    தமிழகத்தில் உள்ள திருப்பூர் உள்பட 38 மாவட்டங்களில் 94 வருவாய் கோட்டங்களுக்கு தலா ஒரு தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்படுகின்றனர்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×