search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை
    X

    புதர்மண்டி பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் நிழற்குடை.

    வருசநாடு அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பயணிகள் நிழற்குடை

    • வாலிப்பாறை சாலை ஓரமாக வண்டியூர் கிராமத்திற்கான பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.
    • நிழற்குடையை மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே வாலிப்பாறை சாலை ஓரமாக வண்டியூர் கிராமத்திற்கான பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை கட்டப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் நிழற்குடையை சுற்றிலும் மரம், செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியவில்லை. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் சிலர் நிழற்குடையை மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சிலர் பகல் நேரங்களிலேயே மது அருந்திவிட்டு போதையில் நிழற்குடைக்குள் படுத்து தூங்குகின்றனர்.

    இதுபோன்ற நேரங்களில் பெண்கள் நிழற்குடை அமைந்துள்ள பகுதியில் நிற்க அச்சமடைகின்றனர். மேலும் நிழற்குடை அமைந்துள்ள பகுதியில் இருந்து சிறிது தூரம் தள்ளி வெயிலில் காத்திருந்து பஸ்களில் ஏறி செல்கின்றனர்.

    சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல போலீசார் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டு நிழற்குடையில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×