என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்.
கொடைக்கானலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- கொடைக்கானலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- இந்த பேரணியில் ஏராளமான நாட்டு நலப்பணி திட்டத்தினர் கலந்து கொண்டனர்,
கொடைக்கானல்:
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பாரதியார் பல்கலைக்கழகம் ஸ்ரீவாசவி கல்லூரி மாணவிகள் கொடைக்கானல் வருவாய்த்துறை மற்றும் போலீசாருடன் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்பாடு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கொடைக்கானல் வட்டாட்சியர் கார்த்திகேயன் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மஞ்சள் பை பயன்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இந்த பேரணியில் ஏராளமான நாட்டு நலப்பணி திட்டத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) தாமரைக்கண்ணன் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ராஜராஜேஸ்வரி, கலைமணி, அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story






