என் மலர்
உள்ளூர் செய்திகள்

டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்ட காட்சி.
டவுன் சாப்டர் பள்ளியில் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி
- நிகழ்ச்சியின் போது, போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் எடுத்து கூறினார்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
நெல்லை, ஆக.11-
தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழித்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 11 ஆம் நாளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய நிறுவனங்களில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக அனுசரித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றிட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் நெல்லை சந்திப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை சாப்டர் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சியில் துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் கலந்துகொண்டு போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் மாணவர்களிடையே எடுத்து கூறினார். தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள் தாஸ் ஜெபக்குமார், இன்ஸ் பெக்டர்கள் பொன் ராஜ், செல்லத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் ஜெபஷ்டியன், நுண்ணறிவு போலீஸ்காரர் வேல்முருகன் உட்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.






