search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திகிராம பல்கலைக்கழகத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு
    X

    போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்பேசினார்


    புகழேந்தி பேசினார்.


    காந்திகிராம பல்கலைக்கழகத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு

    • காந்திகிராம பல்கலைக்கழகத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
    • இதில் இளைஞர்களுக்கு போதைபொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக போதைக்கு எதிரான முயற்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி அனைவரையும் வரவேற்றார்.

    பதிவாளர் சிவக்குமார் தலைமை விருந்தினரை பாராட்டி சால்வை மற்றும் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக இளைஞர்கள் இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    மாணவர்கள் போதைப் பொருள் இல்லாத வாழ்க்கையை உருவாக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான தேசத்தை கட்டி எழுப்ப அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×