search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்த மாணவ-மாணவிகள்.

    போடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

    • போடியில் சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • தேசியக்கொடி போன்று மூவர்ணக் தொப்பி சீருடை அணிந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சிசம் பள்ளி சார்பாக 75-வது சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தேசியக்கொடி போன்று மூவர்ணக் தொப்பி சீருடை அணிந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். பேரணியை போடி டி.எஸ்.பி. சுரேஷ் தீபச் சுடர் ஏற்றி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    காந்தி, நேரு, வ.உ.சிதம்பரனார், பகத்சிங், பாரதியார், போன்ற உருவ முகமூடி அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    பல்வேறு மாணவர்கள் சிலம்பம், சுருள்பட்டா, வாள் வீச்சு, வேல் கம்பு சுழற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளிலும் ஸ்கேட்டிங் விளையாட்டுகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

    ஜெய்ஹிந்த்,வந்தே மாதரம் முழக்கங்களுடன் போதையை ஒழிப்போம் தேசத்தை காப்போம் என்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

    Next Story
    ×