என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஊட்டியில் ஆந்திர மாநில வாலிபர் திடீர் சாவு
  X

  ஊட்டியில் ஆந்திர மாநில வாலிபர் திடீர் சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா்.
  • உதகை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

  ஊட்டி

  ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(23). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் நாகராஜ் தனது நண்பா்கள் 2 பேருடன் ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க ஊட்டிக்கு வந்தார். 3 பேரும் ஒரு தனியாா்ஓட்டலில் அறை எடுத்து தங்கினா். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாகராஜ் கூறியதைத் தொடா்ந்து அவரது நண்பா்கள் அவரை அருகிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

  அங்கு சிகிச்சைக்கு பின்னா் அவா்கள் 3 பேரும் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பினா். இந்நிலையில் வரும் வழியில் நாகராஜ் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவருடைய நண்பா்கள் அவரை ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து உதகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

  Next Story
  ×