என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சின்னசேலம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய என்ஜினீயர்
  X

  சின்னசேலம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய என்ஜினீயர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவர் புல் கட்டுகளை தலையில் தூக்கி விட மாணவியை உதவிக்கு அழைத்தார்.
  • கடந்த 3- ந்தேதி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார்.

  கள்ளக்குறிச்சி:

  சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி, அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள வயலில் வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த 19-வயது என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் புல் கட்டுகளை தலையில் தூக்கி விட மாணவியை உதவிக்கு அழைத்தார். உடனே மாணவி அருகில் வந்ததும் அவரை மாணவர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

  ஆனால் இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் மாணவி சோர்வுடன் இருந்து வந்தார். கடந்த 3- ந்தேதி திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி கர்ப்ப மாக இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து என்ஜினியரிங் படித்துவரும் மாணவரை வலைவீசி தேடி வருகி ன்றனர்.

  Next Story
  ×