search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் கூடுதலாக 250 கன அடி தண்ணீர் திறக்க  வேண்டும் - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் கூடுதலாக 250 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை

    • கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் பாசன குளங்கள் எல்லாம் தற்போது கால்நடைகள் கூட குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் வறண்டு போய் கிடக்கின்றன.
    • ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த 3 நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடச் செய்தார்.

    தூத்துக்குடி:

    ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் பாசனத்தில் ஸ்ரீவை குண்டத்தில் இருந்து ஏரல் வரை நேரிடையாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொற்கைகுளம் பாசனம் மூலம் கொற்கை, கொடுங்கணி, உமரிக்காடு மற்றும் முக்காணி பகுதிகளில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவிலும், ஆறுமுகமங்கலம் குளம் மூலம் கரையடியூர், கணபதிசமுத்திரம், லெட்சுமிபுரம், அகரம், கொட்டாரக்குறிச்சி, மார மங்கலம், இடையர்காடு மற்றும் அரசன்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 300 ஏக்கர் பரப்பளவு பேய்க்குளம் குளம் பாசன பகுதிகளில் சுமார் 3ஆயிரம் ஏக்கார் என மொத்தம் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் இந்த பாசன குளங்கள் எல்லாம் தற்போது கால்நடைகள் கூட குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் வறண்டு போய் கிடக்கின்றன. இதனால் இங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, நெல் மற்றும் வெற்றிலை பயிர்கள் அனைத்தும் கருகி விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த 3 நாட்க ளுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடச் செய்தார். குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்ப ட்டுள்ளதால் வாய்காலில் வரும் தண்ணீர் பேய்க்குளம் வரை தண்ணீர் சென்று சேரவில்லை.

    இதையடுத்து அவர், அமைச்சர் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் தாமிரபரணி ஆறு செயற்பொறியாளார் ஆகியோரை சந்தித்து ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரோடு கூடுதாலாக 250 கன அடி தண்ணீர் சேர்த்து 350 கன அடி தண்ணீர் தொடர்ந்து 15 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    Next Story
    ×