என் மலர்
உள்ளூர் செய்திகள்

புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய செல்ல முத்துமாரியம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
செல்ல முத்துமாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா
- புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த செல்லமுத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது தினந்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.
சுமார் 1 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.