என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நோயாளி, டிரைவர் தூக்கி வீசப்பட்டு பலி
  X

  ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நோயாளி, டிரைவர் தூக்கி வீசப்பட்டு பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நோயாளியை இறக்குவதற்குள் ஆம்புலன்ஸ் திடீரென பின்னோக்கி சென்றது.
  • போலீஸ் குடியிருப்பில் இருந்த தண்ணீர் தொட்டியில் மோதி பள்ளத்தில் விழுந்தது.

  கோவை:

  கோவை மாவட்டம் வால்பாறை அருகே பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து சிவக்குமார் என்பவரை சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்து வந்தனர். சிவக்குமாருடன் அவரது மனைவி சாந்தி, மகன் மணிகண்டன் ஆகியோரும் வந்தனர்.

  மருத்துவமனையை நெருங்கியதும் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, நோயாளியை இறக்குவதற்காக டிரைவர் காளிதாஸ், பின்பக்கமாக வந்து கதவை திறந்தார். முதலில் சாந்தி, மணிகண்டன் இருவரும் இறங்கி ஆம்புலன்ஸ் அருகில் நின்றிருந்தனர்.

  நோயாளி சிவக்குமாரை இறக்குவதற்குள் ஆம்புலன்ஸ் பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்தது. ஆம்புலன்ஸ் இடித்ததில் சாந்தி, மணிகண்டன் காயமடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ், அருகில் போலீஸ் குடியிருப்பில் இருந்த தண்ணீர் தொட்டியில் மோதி பள்ளத்தில் விழுந்தது. நோயாளி சிவக்குமார் மற்றும் டிரைவர் காளிதாஸ் மீது ஆம்புலன்ஸ் ஏறியது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×