search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினம் நகராட்சியில் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    காயல்பட்டினத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இ-சேவை மையத்தை திறந்து வைத்த போது எடுத்த படம்.

    காயல்பட்டினம் நகராட்சியில் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படும்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • காயல்பட்டினம் அப்பா பள்ளி தெருவில் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • சிறுபான்மை இன மக்களுக்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் அப்பா பள்ளி தெருவில் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பி தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் தாஜூதீன், முகமது இஸ்மாயில், முத்து ஹாஜி, முன்னாள் தலைவர் அபுல் ஹசன் கலாமி, பொருளாளர் முகமது உமர், செயற்குழு உறுப்பினர்கள் முகமது இக்பால், கலிலூர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகமது ஆதம் சுல்தான் வரவேற்று பேசினார். பேரவையின் துணைச் செயலாளர் நவாஸ் அகமது தொடக்க உரையாற்றினார்.

    விழாவில் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், சிறுபான்மை இன மக்களுக்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி அவரது தனி கவனத்தில் காயல்பட்டினம் நகராட்சி இயங்கி வருகிறது. அதனால் இங்கு அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

    இதில் கூட்டுறவு வங்கி தலைவர் உமரி சங்கர், காயல்பட்டினம் நகர் மன்ற தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வகுமார், அரசு வக்கீல் பூங்குமார், ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், ஸ்பிக் நகர் பகுதி செயலாளர் ஆஸ்கர், கவுன்சிலர்கள் சுகு ரங்கநாதன், அன்வர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×