என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மத்தூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை செயலாளராக தேர்வு.
- எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மத்தூர்,
அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமியை செயலாளராக தேர்ந்தெடுக் கப்பட்டதையடுத்து மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் சக்கரவர்த்தி (வடக்கு), தேவராசன் (தெற்கு), மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் பியாரஜான், களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி, சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல்,
ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், ஒன்றிய துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி அக்ரி சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தி,
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னபாப்பா நடராஜன், ஒன்றிய மீனவரணி செயலாளர் எம்.ஆர் முனுசாமி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் டி.ஜெகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பூபதி, இளம் பாசறை செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






