என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்- தம்பிதுரை
- மதுரை மாநாட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க., தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.
- புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஓசூர்,
ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மதுரையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட அவை தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார்.
ஓசூர் தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் அமைச்சர் நகர்மன்ற உறுப்பின ருமான பி.ஆர்.வாசுதேவன் வரவேற்றார். இதில், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகரும், கட்சியின் கொள்கை பரப்பு செயலாள ருமான மு.தம்பிதுரை எம்.பி. மற்றும் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
பின்னர், தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
கடந்த காலங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மதுரையில் மாநாடு நடத்தி தமிழகத்தில் எப்படி திருப்புமுனையை உருவாக்கினார்களோ, அதே போல நடைபெறவுள்ள மதுரை மாநாட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க., தமிழ்நாட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அ.தி.மு.க எப்போதும் துணை நிற்கும். தமிழ்நாட்டில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கே.மதன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி. ராஜேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் உள்பட பலர் பேசினர். முடிவில், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ராமு நன்றி கூறினார்.






