என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- கிராம வருவாய் கணக்குகள் மற்றும் கணினியில் பட்டா மாறுதல் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க நகர பொறுப்பாளர் சித்திரவேலு தலைமை வகித்தார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பட்டா மாறுதல் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேராவூரணி அருகேயுள்ள நாட்டாணிக்கோட்டை கிராமத்தில் 3 தலைமுறைகளாக குடியிருந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் அவர்கள் பெயரிலேயே கிராம வருவாய் கணக்குகள் மற்றும் கணினியில் பட்டா மாறுதல் செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க நகர பொறுப்பாளர் சித்திரவேலு தலைமை வகித்தார்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ராஜமாணிக்கம், த.மா. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் கருப்பையா, மாவட்ட குழு ஜெயராஜ், சி.பி.ஐ நகரச் செயலாளர் மூர்த்தி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.பி.ஐ பேராவூரணி ஒன்றிய செயலாளர் கருப்பையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய, நகர தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் மற்றும் நாட்டாணிக்கோட்டை கிராமத்தார்கள் கலந்து கொண்டனர்.