என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் எதிரில், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களின் ஓய்வுக்கு பிறகு கருணை அடிப்படையிலான பணி வாய்ப்புகளை வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் -கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் கோரிக்கை
- நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
- அடிப்படை கல்வித்தகுதி உடைய பணியாளர்களின் அரசு வேலை மறுக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் எதிரில், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் செழியன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். மாவட்டத்தலைவர் சரவணன், வி.ஏ.ஓ., சங்க மாவட்டத் தலைவர் பூபதி, மாநில செயலாளர் பெருமாள், பட்டு வளர்ச்சித்துறை செல்வகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் நிறைவுரை ஆற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள 20 மாநகராட்சிகளில் மக்களின் அடிப்படை பணிகள் செய்து வரும், தூய்மைப் பணியாளர்கள், தெருவிளக்கு பராமரிப்பு பணியாளர்கள், குடிநீர் வழங்கல், துப்பரவு பணி மேற்பார்வையாளர்கள், வருவாய் உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்கள், ஓட்டுனர்கள், இரவுக் காவலர், தரவு உள்ளீட்டாளர்கள், தட்டச்சர், மருத்துவர்கள், நகர சுகாதார செவிலியர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை பணியளர்களின் பணி பாதுகாக்கப்பட்ட, அடிப்படை கல்வித்தகுதி உடைய பணியாளர்களின் அரசு வேலை மறுக்கப்படுகிறது.
அத்துடன் கருணை அடிப்படை பணி வாய்ப்புகள் இல்லாமல் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வுக்குப்பிறகு இந்த பணியிடங்கள் நிரப்பாமல் எதிர் வரும் காலங்களில் வெளிமுகமை மூலம் நிரப்பப்படும் என்றும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை 3417ஆக குறைக்கும் வகையில் கடந்த அக்டோபர் 20-ம் தேதி வெளியிட்டுள்ள அரசாணை 152-ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.






