என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடம்பத்தூரில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    • அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
    • திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, பால் விலை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஆள் கடத்தல், கொலை,கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் மக்களுக்கு பாதுகாப்பு இன்மை அதிகரிப்பு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, போதைப்பொருட்கள் புழக்கத்தால் சமூக விரோதிகள் ஊடுருவல் அதிகரிப்பு, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வு போன்றவற்றை கண்டித்தும், தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி ஆட்சியைப் பிடித்திருக்கும் தி.மு.க அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க.வின் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கமாண்டோ பாஸ்கர், சிற்றம் சீனிவாசன், இன்பநாதன், ஞானகுமார், கடம்பத்தூர் முதல் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், ஆர்.டி.இ. சந்திரசேகர், போளிவாக்கம் மணி 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    அதேபோல பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    Next Story
    ×