என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து திண்டுக்கல், தேனியில்  அ.தி.மு.கவினர் மறியல் போராட்டம்
  X

  கோப்பு படம்

  எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து திண்டுக்கல், தேனியில் அ.தி.மு.கவினர் மறியல் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போராட்டம் நடத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
  • திண்டுக்கல், தேனியில் அ.தி.மு.கவினர் மறியல் போராட்டம் செய்தனர்.

  திண்டுக்கல்:

  சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போராட்டம் நடத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து திண்டுக்கல் கல்லறை தோட்டம் பகுதியில் கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

  மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் ராஜசேகரன், சுப்பிரமணி, சேசு, முரளி, மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

  இதபோல் தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் தலைமையில் அ.தி.மு.கவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  Next Story
  ×