search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் பக்தர்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்- முன்னாள் எம்.பி.  ராமசுப்பு வலியுறுத்தல்
    X

    முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு

    சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் பக்தர்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்- முன்னாள் எம்.பி. ராமசுப்பு வலியுறுத்தல்

    • பக்தர்கள் 10 நாட்கள் வரை கோவிலில் தங்கியிருந்து அய்யனாரை வழிபட்டு வருவது தொன்று தொட்டு இருந்து வருகிறது.
    • முந்தைய காலங்களில் எல்லாம் வனத்துறையினர் எந்த நெருக்கடியும் தராமல் சிறப்பு அனுமதி வழங்கி வந்துள்ளனர்.

    ஆலங்குளம்:

    ஆடி அமாவாசை திருவிழா விற்காக, காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, உரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமன்றி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வந்து, குடில் அமைத்து, அங்கே 5 முதல் 10 நாட்கள் வரை தங்கியிருந்து, ஆற்றில் புனித நீராடி, தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி அய்யனாரை வழிபட்டு வருவது தொன்று தொட்டு இருந்து வருகிறது.

    முந்தைய காலங்களில் எல்லாம் வனத்துறையினர் எந்த நெருக்கடியும் தராமல் சிறப்பு அனுமதி வழங்கி வந்துள்ளனர். பொதுமக்களும் காட்டுப் பகுதிகளில் எந்த சேதமும், அங்கு வாழும் மிருகங்களுக்கு எந்த பங்கமும் ஏற்படுத்தவில்லை.

    எனவே, வழக்கம்போல் பொதுமக்கள் கோவிலுக்கு சென்று தங்கி இருந்து சுவாமி தரிசனம் செய்து வர உரிய அனுமதி வழங்கவும், உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×