என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் குவிப்பு
    X

    ஓமந்தூரார் மருத்துவமனையில் கூடுதல் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் குவிப்பு

    • செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி
    • ஐசியூ பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

    அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர், விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றனர்.

    அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கைது குறித்து செந்தில் பாலாஜி சகோதரரிடம் தெரிவிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள் செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். தற்போது அவர் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது சி.ஆர்.பி.எஃப். வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளுடன் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×