என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லில் பரிசல் சவாரி செய்வதற்கு கூடுதல் பணம் வசூல்
- மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணத்திற்கும் மிகுந்த அளவில் ரூபாய் 2000 முதல் 5 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
- பரிசலில் செல்வதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் மிகுந்த அளவில் வசூலிப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் செய்தி வெளியிடப்பட்டது.
தருமபுரி,
ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் வருவது வழக்கம்.
தற்போது தமிழகத்தில் கோடை விடுமுறை என்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதேபோல் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து, ஆயில் மசாஜ் செய்து, இங்குள்ள அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், மீன் சமையல் அருந்தியும் மகிழ்ச்சியாக செல்கின்றனர்.
அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூல் செய்கின்றனர்.
குறிப்பாக பரிசல் சவாரி செய்வதற்கு ரூபாய் 750 கட்டணம் செலுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டணத்திற்கும் மிகுந்த அளவில் ரூபாய் 2000 முதல் 5 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
இதனால் ஏழை எளிய மக்கள் பரிசலில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருகின்றன.
பரிசலில் செல்வதற்கு விதிக்கப்பட்ட கட்டணத்திற்கும் மிகுந்த அளவில் வசூலிப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோடை விடுமுறை என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






