search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாடுகளில் இருந்து மேலும் 60 சிலைகளை மீட்க நடவடிக்கை- டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
    X

    நாகேஸ்வரன் கோவில் வளாகத்திலுள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

    வெளிநாடுகளில் இருந்து மேலும் 60 சிலைகளை மீட்க நடவடிக்கை- டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

    • கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர்.
    • திருடப்பட்ட சிலை எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்திற்கு வருகை தந்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கும்பகோணம் சரக சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கான புதிய அலுவலக கட்டிடத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். தொடர்ந்து, கும்பகோணம் மற்றும் மதுரையில் சிறப்பாக பணியாற்றிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு வெகுமதியுடன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    இதில், சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் 187 அரிய புராதன சிலைகளை மீட்டு சாதனை புரிந்துள்ளனர். குறிப்பாக, 1962-ம் ஆண்டு திருடு போன நடராஜர் சிலை மீட்கப்பட்டது சிறப்பிற்குரியது. இந்த சிலைகள் அனைத்தும் இனி எக்காலத்திலும் யாராலும் திருட முடியாத வகையில், சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன், சமீபத்தில் கைப்பற்றிய 300 சிலைகள் உட்பட அனைத்து சிலைகளும், முப்பரிமான முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரேடியோ ப்ரீக்குவன்ஸி முறையில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும், அப்படி மீறி சிலை திருடப்பட்டால், இது எங்கு இருக்கிறது என்பதனை எளிதாக கண்டறியும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மேலும் 60 சிலைகளை விரைவில் மீட்க சிலை தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறிளார்.

    Next Story
    ×