என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ்நிறுத்தத்தில் நின்று செல்லாத டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை-நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
- தட்டப்பள்ளம் சேட்டு பேட்டை பகுதியில் அதிவேகமாக. வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேகத்தடை அமைக்க வலியுறுத்தப்பட்டது.
- பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
அரவேணு,
புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அலுவ லகத்தில் துணைதலைவர் செல்வராஜ். தலைமையில் நடைபெற்றது. அமைப்பின் செயலாளர் ராஜன். அமைப்பின் கடந்த மாதத்தின் செயல்பாடுகள் மற்றும் வரும் எதிர்கால அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.
அமைப்பின் மசினகுடி உறுப்பினர்கள் அமைப்பின் செயலாளர் ராஜனுக்கு அவரின்.சிறந்த.சேவையை பாராட்டி சால்வைஅணிவித்து கவுரவப்படுத்தினர். அமைப்பின் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
தட்டப்பள்ளம் சேட்டு பேட்டை பகுதியில் அதிவேகமாக. வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேகத்தடை அமைக்க வலியுறுத்துவது, கோத்தகிரி பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் பழுதடைந்த நடைபாதையை சரிசெய்ய வலியுறுத்துவது.
பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் சில பஸ் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது.
மசினகுடி பகுதியில் வாடகை டாக்சி. வாகன ங்கள் நிறுத்த போதுமான இட வசதி செய்து தர சம்மந்தப்பட்ட அதிகாரி களை வலியுறுத்துவது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொருளாளர் மரியம்மா. துணைதலைவர் ஜெயந்தி, இணை செயலாளர் கண்மணி, பி.ஆர்ஓ.முகமது இஸ்மாயில், கிரேஸி, செயற்குழு உறுப்பினர்கள், திரைசா, விக்டோரியா, லலிதா ரோஸ்லின், பீட்டர். ராமகிருஷ்ணா. விபின்குமார், செபாஸ்டின் வினோபா போப் மற்றும் மசினகுடி பகுதியை சேர்ந்த தேவஞானம்.
அழகப்பன். சிவன் பிரகாஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார்.






