search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளி மாவட்டத்தில் இருந்து பால் கொண்டு வரப்படுகிறது- நாளை முதல் சப்ளை சீராகும்
    X

    வெளி மாவட்டத்தில் இருந்து பால் கொண்டு வரப்படுகிறது- நாளை முதல் சப்ளை சீராகும்

    • மீண்டும் பால் பவுடர் பிராசசிங் செய்வதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    • பால் வினியோகம் நாளை முதல் சீராகும். தாமதம் ஏற்படாது.

    சென்னை:

    அம்பத்தூர் பால் பண்ணையில் நீடித்து வரும் பால் வினியோகம் தாமதத்திற்கான காரணம் குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த வாரத்தில் ஏற்பட்ட எந்திர பழுதின் காரணமாக பால் பவுடர் கலப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் அந்த பழுது சரி செய்யப்பட்டது.

    ஆனால் மீண்டும் பால் பவுடர் பிராசசிங் செய்வதில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    தினமும் 4 லட்சம் முதல் 5 லட்சம் லிட்டர் பால் இங்கு உற்பத்தி செய்து பாக்கெட்டுகளாக வினியோகிக்கப்படுகிறது. எந்திரம் பழுதானதால் குறித்த நேரத்திற்கு பால் பாக்கெட் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 2 லட்சம் லிட்டர் வரை தான் அந்த நேரத்திற்குள் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையான அளவுக்கு உற்பத்தி செய்வதற்கு கால தாமதம் ஆகிறது.

    அதனால் 3 லட்சம் லிட்டர் பாலை சேலம், மதுரை, வேலுர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று கொண்டு வரப்படுகிறது. அந்த பால் அங்கேயே பிராசசிங் செய்து எடுத்து வரப்படும். நேரடியாக இங்கு கொண்டு வந்து பாக்கெட்டில் அடைக்கப்படும். அதனால் பால் வினியோகம் நாளை முதல் சீராகும். தாமதம் ஏற்படாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×