search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்- நாளை, நாளை மறுநாள் நடக்கிறது
    X

    கோவில்பட்டியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்- நாளை, நாளை மறுநாள் நடக்கிறது

    • 1-ந் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

    கோவில்பட்டி:

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நாளை ( சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவில் பட்டி தாசில்தார் சுசிலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் வாக்காளரை உறுதி செய்யவும், வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தவிர்க்கும் வகையில் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் பேரில், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது.

    இப்பணியானது கடந்த 1-ந் தேதி முதல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்குச் சென்று ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் அனை வரும் பயன்பெறும் வகையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி அலுவலர்க ளால் இப்பணி நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளிடம் உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

    மேலும் www.nvsp.in, Voters Portal என்ற இணையதளங்களின் மூலம் இணையவழியில் படிவம் 6பி உள்ளீடு செய்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கலாம். Voters Helpline App என்ற கைப்பேசி செயலி மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×