தியாகதுருகத்தில் மது பாட்டில் விற்ற வாலிபர் கைது

ரோந்து பணியில் ஈடுபட்டார்.மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது.
தியாகதுருகத்தில் மது பாட்டில் விற்ற வாலிபர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆசிர்வாதம் (வயது 44) என்பவர் தனது வீட்டின் பின்புறம் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அவரிடமிருந்து 7 மதுபாட்டில் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதேபோல் பெரியமாமாட்டு பஸ் நிறுத்தம் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அங்கிருந்த 17 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (35) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com