என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
போடியில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பெண் உடல்
- இவரது சகோதரர் உத்தம பாளையத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது பெண்ணிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.
- கதவை உடைத்து உள்ளே சென்ற போது பெண்ணின் வீட்டின்ஹாலில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி வடக்கு ராஜ வீதியை சேர்ந்த மணி மந்திரி மகள் விஜயலெட்சுமி (58). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வாழ்ந்து வந்தார். இவரது சகோதரர் உத்தம பாளையத்தில் இருந்து கொண்டு அவ்வப்போது விஜயலெட்சுமிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வந்தார்.
கடந்த 7ஆம் தேதி வீட்டிற்கு வந்த அவர் மீண்டும் 2 நாட்கள் கழித்து அவருக்கு போன் செய்து ள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சகோதரரின் மகன் முத்துக்குமரன் (38) என்பவர் வீட்டிற்கு வந்து பார்த்தார். வீடு உட்புறமாக பூட்டி இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது விஜயலெட்சுமி வீட்டின்ஹாலில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து முத்து க்குமரன் போடி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெ க்டர் அசோக் தலைமையி லான் போலீசார் அங்கு வந்து அவரது உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன விஜயலெட்சுமிக்கு அதிகளவு சொத்துகள் இருப்பதால் அதற்காக யாரேனும் கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






