என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண்ணால் பரபரப்பு!
    X

    கோப்புப்படம்.

    குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண்ணால் பரபரப்பு!

    • குடும்ப பிரச்சினையில் மனவேதனையடைந்த சபீனா விஷம் குடித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
    • போலீசாரிடம் புகார் தெரிவிக்கும்போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் 1-வது வார்டு கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சபீனா (வயது 23). இவருக்கு வீரபத்திரன் என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு தர்ஷன் என்ற மகனும், தாரணி என்ற மகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதால் சபீனா கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை வீரபத்திரன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சபீனா தனது கணவர் வீட்டுக்கு சென்று குழந்தைகளை தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாமியார் சிட்டம்மாள் மற்றும் முருகேஸ்வரி, ரஞ்சிதம் ஆகியோர் சபீனாவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதனால் வேதனையடைந்த சபீனா விஷம் குடித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    போலீசாரிடம் புகார் தெரிவித்தபோது மயங்கி விழுந்தார். உடனடியாக போலீசார் அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×