என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரத்தில் பைக் மோதி ஜவுளிவியாபாரி சாவு
- இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்று குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது48). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் ஆர்.எஸ்.தொட்டம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






