என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டக்குப்பம் அருகே குளக்கரையில் பிணமாக கிடந்த வாலிபர்
    X

     குளக்கரையில் பிணமாக கிடந்த வாலிபரை படத்தில் காணலாம்.

    கோட்டக்குப்பம் அருகே குளக்கரையில் பிணமாக கிடந்த வாலிபர்

    • கோட்டக்குப்பம் அருகே குளக்கரையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
    • கோட்டகுப்பம் சப்- இன்ஸ்பெக்டர் குமாரசாமி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு சோதனை சாவடி முருகன் கோவில் குளக்கரையில் வாலிபர் உடல் இருப்பதாக கீழ்புத்துப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் வேலு கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் கோட்டகுப்பம் சப்- இன்ஸ்பெக்டர் குமாரசாமி நேரில் சென்று விசாரணை நடத்தினார் .மேலும் உடலை கைப்பற்றி புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு பிதேர பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    பிணமாக கிடந்த வாலிபர் யார் எந்த ஊரைசேர்ந்தவர்? எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டு குளக்கரையில் வீசி செல்லப்பட்டாரா ? இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×