search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி-திண்டுக்கல் சாலையில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளம்
    X

    சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கம்பிகள்.

    பழனி-திண்டுக்கல் சாலையில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் பள்ளம்

    • சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது.
    • உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும், ஒளிரும் பட்டைகள் ஒட்டவேண்டும்.

    திண்டுக்கல்:

    பழனி-ஒட்டன்சத்திரம் இடையே 17 கி.மீ தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.172 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை பணிகள் தொடங்கி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இத்திட்டத்திற்காக 9.50 மீட்டர் அகலமுள்ள சாலையை 16.50 மீட்டராக அகலப்படுத்தப்பட்டது.

    மேலும் சாலையோரங்களில் இருந்த 700-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது பழனி-திண்டுக்கல் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மழைநீர் வடிந்து செல்ல சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

    இதற்காக சாலையின் இருபுறமும் பெரியபள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் தடுப்புமற்றும் அறிவிப்பு பலகை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது.

    எனவே உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்க ேவண்டும், ஒளிரும் பட்டைகள் ஒட்டவேண்டும். பணி நடைபெறும்போது எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×