என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிரான்ஸ்பார்மரின் பக்கவாட்டில் மோதிய தனியார் பஸ்
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரின் பக்கவாட்டில் மோதியது.
- பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோப் கட்டி பஸ்சை பின்னோக்கி கொண்டு வந்தனர்.
மங்கலம் :
சோமனூர் பகுதியில் இருந்து திருப்பூர் வரை மங்கலம் வழியாக தனியார்பஸ் இயங்கி வருகிறது.இந்த நிலையில் நேற்று சோமனூரில் இருந்து மங்கலம் நோக்கி தனியார்பஸ் வந்துகொண்டிருந்தது.பஸ்சில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
மாலை 6:30 மணியளவில் தனியார்பஸ் பரமசிவம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரின் பக்கவாட்டில் மோதியது.இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது பற்றி தகவல் அறிந்து மங்கலம் போலீசார்,மின்வாரிய அதிகாரிகள்,சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி,பள்ளபாளையம் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோப் கட்டி பஸ்சை பின்னோக்கி கொண்டு வந்தனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.






