என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புதிய விரைவு ரெயில் இயக்க வேண்டும் -கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை
    X

    கனிமொழி எம்.பி.யிடம் செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் கோரிக்கை மனு கொடுத்தபோது எடுத்தபடம்.

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புதிய விரைவு ரெயில் இயக்க வேண்டும் -கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தார்.
    • திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புதியவிரைவு ரெயில் இயக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    வளர்ந்து வரும் நகரமான திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு ெரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பல ஊர்கள் சுற்றி பல மணி நேர பயணத்திற்கு பின்பு சென்னை செல்கிறது.இதனால் கூடுதலாக திருச்செந்தூரில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி வழியாக புதியதாக விரைவு ரெயில் ஒன்று இயக்க வேண்டும்.அதுவும் நேர்வழியில் இயக்க வேண்டும் குறிப்பிட்ட வழித்தடத்தில் நின்று குறிப்பிட்ட நேரத்தில் சென்னை செல்ல வேண்டும். அப்படி புதிய ரெயில் இயக்கும்போது திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 2 தொகுதியில்உள்ள ஏராளமான மக்கள் சென்னையில் தொழில் செய்வதால் கோவில் கொடை விழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வர வசதியாக இருக்கும். அதனால் புதிய ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட கனிமொழி எம்.பி. இதுசம்பந்தமாக அதிகாரியுடன் கலந்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×