என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்
    X

    புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடை பெற்றது.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்

    • பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

    இதன் மூலம் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று பலன் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இங்குள்ள கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து இடிந்து விடும் நிலையில் இருந்தது.

    இப்பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருதார்.

    அதன்படி புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது ரூ1 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமை வகித்தார்.

    ஒன்றியக் குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார், அவை தலைவர் நெடுஞ்செழியன், எம்.என்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் வரவேற்றார் விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்–செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தனர்.

    ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, தினகர், மங்கை.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் பழனிவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×