search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே தனியார் காப்பகத்தில் குரங்குகடித்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை.
    X

    விக்கிரவாண்டி அருகே தனியார் காப்பகத்தில் குரங்குகடித்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை.

    • தனியாயா காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரளாவைச் சேர்ந்த ஜீபின் பேபி (வயது 45) நடத்தி வருகிறார். இங்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்கள் தங்கியுள்ளனர்.மனநலம் பாதிக்கப்பட்ட ஜாபருல்லா (45) என்பவரை இந்த காப்பகத்தில் திருப்பூரைச் சேர்ந்த ஹனிதின் 2021 அக்டோபர் 1-ந் தேதியன்று சேர்த்தார். பின்னர் 2022-ம் வருடம் ஜாபருல்லாவை காண ஹனிதின் அன்பு ஜோதி காப்பகத்திற்கு வந்தார். அங்கு அவரைக் காணவில்லை. இது குறித்து ஆசிரம உரிமையாளரிடம் விசாரித்த போது, ஜாபருல்லாவை பெங்களூரு காப்பத்திற்கு மாற்றியுள்ளதாக கூறினார். அங்கும் ஜாபருல்லாவை காணவில்லை.இது தொடர்பாக ஹனிதின் கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரினை பெற மறுத்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்அதன் மீதான உத்தரவின் பேரில் வருவாய்த் துறை விழுப்புரம் ஆர்.டிஒ. ரவிச்சந்திரன், செஞ்சி போலீஸ் டி.எஸ்.பி. பிரியதர்ஷினி, சமூக நல அலுவலர் ராஜாம்பாள், மாற்றுத் திறனாளி நல அலுவலர் தங்கல் மற்றும் போலீசார் காப்பகத்திற்கு சென்றனர். அங்கிருந்த 137 பேர் மற்றும் காப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். இதில் காப்பகத்தில் அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்று இருந்தது. மேலும், இந்த காப்பகத்தில் இருந்து 17 பேர் காணாமல் போனது தெரியவந்ததுகுரங்கு கடித்ததுஆய்வு நடத்து கொண்டிருந்த போது, காப்பக உரிமையாளர் ஜீபின் பேபியால் வளர்க்கப்படும் குரங்கு அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து காப்பகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் அங்கிருந்து மாலை 4 மணிக்கு வெளியேறினர். தொடர்ந்து இன்றும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

    மருத்துவ சிகிச்சைமேலும், விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறையை சேர்ந்த மருத்துவக் குழு நேற்று இரவு காப்பகத்திற்கு விரைந்தது. குரங்கு கடித்தவர்களுக்கும், அங்கிருந்த அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து மாத்திரை மருந்துகள் வழங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    Next Story
    ×