search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை காப்பாற்றுவது குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி
    X

    ஆறு, வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்பது குறித்து பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.

    வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை காப்பாற்றுவது குறித்து மாதிரி ஒத்திகை பயிற்சி

    • பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
    • வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை பத்திரமாக மீட்பது எப்படி?

    தஞ்சாவூர்:

    பேரிடர்களினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 1989-ம் ஆண்டு முதல் அக்டோபர் 13-ம் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக ஐக்கிய நாடு பொது சபையினால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    பேரிடர்களின் தன்மையை அறிந்து அதன் அபாயத்தை எவ்வாறு குறைப்பது, பேரிடர் காலத்தில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

    இந்த நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

    இந்த பேரணியை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பேரணியானது தஞ்சாவூர் அழகி குளத்தில் முடிவடைந்தது.

    மன்னர் சரபோஜி கல்லூரி , பாரத் கல்லூரி, மருதுபாண்டியர் கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி, டாக்டர் நல்லி குப்புசாமி மகளிர் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவ- மாணவிகள் பேரிடர் குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.

    பேரணியின் முடிவில் அழகிகுளத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சியினை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி, செல்வம் மற்றும் தீயணைப்பு, மீட்புத்துறையினர், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் ஆத்தபுத்திரா தன்னார்வலர்களுடன் இணைந்து வழங்கினார்கள்.

    இதில் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை பத்திரமாக மீட்பது எப்படி ? என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு செயல்களை பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் செய்து காண்பித்தனர்.

    இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகர நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி, தாசில்தார் சீமான், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் , இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் வரதராஜன், துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர் , ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ், 108 ஆம்புலன்ஸ் மேலாளர் விமல், பேரிடர் பயிற்றுனர்கள் பெஞ்சமின், சுரேஷ், மாநகர உறுப்பினர் செந்தில்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×