என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமணமான இளம்பெண் திடீர் மாயம்
  X

  திருமணமான இளம்பெண் திடீர் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சம்பவத்தன்று வீட்டை விடு வெளியே சென்ற பாக்கியலட்சுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பாக்கியலட்சுமியை தேடி வருகின்றனர்

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகேயுள்ள பெரிய முருக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜு. இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 20).

  இவருக்கும், உச்சியம்பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஆனால் குழந்தைகள் இல்லை.

  இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுபோல ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதத்துக்கு முன்பு பாக்கியலட்சுமி தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விடு வெளியே சென்ற பாக்கியலட்சுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவரை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

  இதையடுத்து கம்பைநல்லூர் போலீசில் ராஜு புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பாக்கியலட்சுமியை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×